படங்களில் வருகின்ற படுக்கையறை காட்சிகள் ரசிகர்களைத்தான் பொதுவாகச் சூடேற்றும். ஆனால் ‘மதன்’ படத்தின் கதை வேறு விதமாக போகிறது.
படத்தில் நடித்தவர்களையே இந்த விவகாரம் சூடேற்றிக் கொண்டிருக்கிறது. ‘மதன் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்து சுனேனா’ தான் என்று ஜெய் ஆகாஷ் அடித்துச் சொல்ல... ‘அது நான் இல்லை... டூப்...’ என்று சுனேனா சொல்ல விவகாரம் பரபரப்பாக வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மாத்தி மாத்தி இருவருமே பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெய் ஆகாஷ் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் ஒன்றைத் தட்டி விட்டிருக்கிறார். “அதில் ‘மதன்’ படத்தில் சுனைனாவை அறிமுகப்படுத்தியதே நான்தான்... அப்புறம் தான் ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வர... அந்தப் படத்தில் நடிக்க அனுமதி வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவரது வளர்ச்சி பாதிக்க வேண்டாமே என்று நான் அனுமதி கொடுத்தேன்... அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்காக எனக்கு நன்றிக்கடன் படாவிட்டாலும் என்மீது ‘டூப் நடிகையைப் போட்டு படமாக்கி விட்டேன்...’ என்று அபாண்டமான பழியைச் சுமத்தாமலாவது இருந்திருக்கலாம்... இந்தப் பிரச்சனை பற்றி நடிகர் சங்கம் விசாரித்து சுனைனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என்று அந்த புகாரில் கண்ணீர் சிந்தாத குறையாக எழுதியிருக்கிறார் ஜெய்ஆகாஷ்
Thursday, December 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment